×

அமெரிக்காவில் இன்று நடக்க உள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு சிரமம்: மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும்

நியூயார்க்: கடந்த மூன்றரை ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே அலாஸ்காவில் இன்று முக்கியமான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இது ரஷ்யாவுக்கு அமெரிக்கா தரும் இறுதி வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்கிடையே, டிரம்ப்-புடின் சந்திப்பு தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேற்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப்-புடின் சந்திப்பில் நல்ல விஷயங்கள் நடக்கவில்லை எனில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு மேலும் அதிக வரிகள் விதிக்கப்படும்’’ என்றார். ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.

Tags : India ,Trump ,Putin ,US ,New York ,President ,Alaska ,Ukraine ,Russia… ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...