பல்லடம், ஆக. 14: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில், சமூக பிரச்சனைகளும் மற்றும் அதைச் சார்ந்த சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார். முடிவில் கவுரவ விரிவுரையாளர் முகிந்தா பிரியதர்சினி நன்றி கூறினார்
