×

சுதந்திர தின விழாவையொட்டி 31 கோயில்களில் சமபந்தி விருந்து; அறநிலையத்துறை தகவல்

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் உள்ள 31 கோயில்களில் சமபந்தி விருந்து நடக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 31 கோயில்களில் நடைபெறும் சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சமபந்தி விருந்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதேபோல், ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடக்கும் சமபந்தி விருந்துகளில் பங்கேற்றனர்.

Tags : Samabandhi ,Independence Day ,Department of Charities ,Chennai ,Hindu Religious and Charities Department ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...