×

மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 2022, 23ம் ஆண்டுகளில் வீடுகள், வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இது தொடர்பாக மாநகராட்சி சொத்து வரி குழுத்தலைவராக இருந்த விஜயலட்சுமியின் கணவரான கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின்படி தற்போது தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் (57), மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

பொன்.வசந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று காலை அழைத்துச் சென்றனர். அங்கு பொன்.வசந்திற்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 114வது வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வராத நிலையில், ேநற்றிரவு மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags : Madurai ,Mayor ,Madurai Corporation ,Kannan ,Vijayalakshmi ,tax ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...