திருச்செங்கோடு, ஆக.14: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு, வீடு வீடாக சென்று அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் விதமாக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, திருச்செங்கோடு நகராட்சி 15வது வார்டு பகுதியில் நாகர்பள்ளம் ரேஷன் கடையை சேர்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 71குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று சர்க்கரை, அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை இளநிலை உதவியாளர் ஜெயவேல், ரேஷன் கடை பணியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர்.

