- திருப்பூர்
- Express
- திப்ருகார்
- அசாம்
- கன்னியாகுமாரி
- திருப்பூர் ரயில்வே
- போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலகு காவல்துறை
திருப்பூர், ஆக. 13: அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருப்பூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் ஒரு வாலிபர் வைத்திருந்த பைக்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திப்தி ரஞ்சன் மாலிக்(29) என்பதும், இவர் ஒடிசா மாநிலம் குர்கா ரயில் நிலையத்தில் இருந்து ஏறி கேரள மாநிலம் பாலக்காடுக்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரை திருப்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி 10 கிலோ கஞ்சாவுடன் திப்தி ரஞ்சன் மாலிக்கை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
