திருப்பூர், ஆக. 13: திருப்பூர் மாவட்டம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டு எண் 44, 45 மற்றும் 50க்கு உட்பட்ட வார்டு பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மண்டபத்தில் நடைபெற்றது.
செல்வராஜ் எம்.எல்.ஏ. முகாமினை பார்வையிட்டார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் தெற்கு தாசில்தார் சரவணன் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். மகளிர் உரிமைத்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை மற்றும் பல்வேறு சேவைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்க பலரும் குவிந்தனர்.
