வேடசந்தூர்: ஆடி மாதத்தில் துஷ்ட தெய்வங்களான முனீஸ்வரன், கருப்புசாமி, காளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் நலன் தேற வேண்டும் என்றும், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விபத்துகள் ஏற்படக்கூடாது என்றும், தொழில்முறையில் எந்தவிதமான இழப்பீடுகளும் ஏற்படக்கூடாது என்றும் விரதம் இருந்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று முன்தினம், அய்யலூர் அருகே வண்டி கருப்பண சுவாமி கோயிலில், குற்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றும், சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்றும் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். இதற்கான சிறப்பு பூஜையில் எஸ்பி பிரதீப் கலந்து கொண்டு விருந்தினை துவங்கி வைத்தார். ஏராளமான போலீசார் குடும்பங்களுடன் வந்து விருந்தினில் பங்கேற்று சென்றனர்.
