திருப்பூர், ஆக. 11: முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு வந்தார். இரவு உடுமலையிலேயே தங்கினார். இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போலீசாருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத் ஏற்பாட்டில் இரவு, காலை, மதியம் என 3 நேரமும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. திமுக நிர்வாகியின் இந்த செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
