திருப்பூர், ஆக. 11: திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சரவணகுமார் கோவில் வழி பேருந்து நிலையத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ்மணி (39), பாண்டித்துரை (42), செந்தில் (எ) கூல செந்தில் (41), ஆகியோர் கோவில் வழி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த சரவணகுமாரிடம் ராஜா என்பவர் குறித்து விசாரித்துள்ளன.
அதற்கு சரவணகுமார் நான் சவாரிக்கு சென்றதால் ராஜாவை பற்றி தெரியவில்லை எனக்கூறினார். தொடர்ந்து மூன்று பேரும் அரிவாளை காட்டி மிரட்டி, கல்லால் 3 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழ்மணி, பாண்டித்துரை, கூல செந்தில் ஆகியோரை கைது செய்து அரிவாளை மீட்டனர்.
