- கீழ் பவானி கால்வாய்
- ஈரோடு
- வெள்ளோடு காவல் துறை
- கீழ் பவானி கால்வாய் பாலம்
- முகாசி புலவன்பாளையம்
- சென்னிமலை சாலை
- வெல்லோட்
- ஈரோடு மாவட்டம்
ஈரோடு, ஆக. 11: ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே, சென்னிமலை ரோடு, முகாசி புலவன்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை வெள்ளோடு போலீசார் நேற்று முன்தினம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
