- உலக தாய்ப்பால் வாரம்
- திருப்பூர்
- ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டங்கள் மாவட்ட திட்ட அலுவலகம்
- மாவட்டம்
- அதிகாரி
- புவனேஸ்வரி…
திருப்பூர், ஆக. 9: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். மேலும், விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார்.
இதில் பிறப்பு எடை குறைவாக உள்ள 50 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சில்ட்ரன் சாரிட்டபின் டிரஸ்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வழங்கினார். பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆயிரம் நாட்கள் கங்காரு முறை பராமரிப்பு, குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதை பற்றியும் விளக்கமாக டாக்டர் சியாமளா கௌரி எடுத்து கூறினார்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் அனைத்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
