×

தாராபுரம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருப்பூர், ஆக. 9: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. அதன்படி தாராபுரம் நகராட்சி வார்டு எண் 3,14, 16 ஆகிய பகுதிகளுக்கு தாராபுரம் முத்து வள்ளியம்மை திருமண மண்டபம், திருமுருகன்பூண்டி நகராட்சி வார்டு எண் 1, 2, 11 ஆகிய பகுதிகளுக்கு பாலாஜிநகர் சமுதாய நலக்கூடம், ருத்ராவதி பேருராட்சி வார்டு எண் 1,2, 3, 4, 7, 8, 15 ஆகிய பகுதிகளுக்கு ருத்ராவதி மாரியம்மன் கோவில் வளாகத்திலும் நடைபெறுகிறது.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக்கு எஸ்.ஜே.எம். மண்டபம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீதம்பட்டி ஊராட்சிக்கு வீதம்பட்டி மாரியம்மன் கோவில் மண்டபம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபுத்துர், கோவிந்தாபுரம் ஊராட்சிகளுக்கு கோவிந்தாபுரம் குமரப்ப வேளாளா் மண்டபத்திலும் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Stalin ,Tarapuram, Thirumuruganpoondi ,Tirupur ,Tirupur District ,Collector ,Manish ,Tarapuram ,Muthu ,
× RELATED அதிமுகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்