×

தாந்தோணிமலை அருகே மூதாட்டி தற்கொலை

கரூர், ஆக. 9: கரூர் தாந்தோணிமலை தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் ராசம்மாள் (75). இவர், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய்த் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்ததோடு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ராசம்மாள், கடந்த 7ம்தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Thanthonimalai ,Karur ,Rasammal ,Thanthonimalai South Gandhigramam ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்