×

கார் மோதி பெட்ஷீட் வியாபாரி பலி

காங்கயம், ஆக.6: உத்தரபிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நஜீம் (45). இவரது நண்பர் அர்பாஷ் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் தங்கி தனித்தனியாக பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நஜீம் நேற்று முன்தினம் டூவீலரில் பெட்ஷீட் வியாபாரத்திற்காக காங்கயம் வந்தார். அங்கு சிறிதளவு வியாபாரத்தை முடித்து கொண்டு, சத்திரவலசு பகுதி அருகே சென்றுள்ளார்.

அப்போது, பின்னால் வந்த‌ ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த நவீன் (35) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் நஜீம் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் நஜீமை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், நஜீம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kangayam ,Najeem ,Pulansagar district ,Uttar Pradesh ,Arbash ,Erode ,Chathiravalasu ,Naveen ,Avalpunthurai ,Erode district ,
× RELATED அதிமுகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்