திருப்பூர், ஆக. 6: திருப்பூர் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முன் தினம் இரவு முதல் திருப்பூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இந்த மழையால் பிச்சம்பாளையம் புதூர் பேருந்து நிறுத்தம், 15. வேலம்பாளையம் பிரிவு, அம்மாபாளையம் ஆகிய இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பெருமாநல்லூர் ரோடு நல்லாற்று பாலத்தில் மழை நீர் வழிந்து ஓடியது. கனமழையால் வெப்பம் தணிந்து சீதோஷன நிலை உருவானது.
