×

ஐகோர்ட் வக்கீல் கொலையில் 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை: போலீசுக்கு உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான இவரை அவரது சித்தப்பாவும் பள்ளி தாளாளருமான தண்டபாணி கூலிப்படை ஏவி கொலை செய்தார். இதுதொடர்பாக தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து நடத்திய விசாரணையின்படி மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முருகானந்தம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கொலை வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை ஐஜிக்கு உத்தரவிட்டார். மேலும், முருகனாந்தம் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயாருக்கு அறிவுறுத்த அவர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி முருகானந்தம் உடலை இன்று பெற்றுசென்று அடக்கம் செய்ய உள்ளனர்.

 

Tags : Chennai ,Muruganandam ,Tarapuram ,Tiruppur district ,Chennai High Court ,Dhandapani ,Madras High Court ,CBI ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...