×

புயல் அச்சத்தில் கடலோர மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.4:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை, கடலூர், காரங்காடு, திருப்பாலைக்குடி உள்ளிட்ட கிராமங்கள் கடற்கரைக்கு மிகவும் அருகேயுள்ளது. புயல் அச்சத்தால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். திருப்பாலைக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களுடைய படகுகளை கடலில் நிறுத்தினால் சேதமாகி விடும் என்ற பயத்தில் ஆற்று ஓடைகளில் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர். அனைத்து படகுகளையும் ஆற்று தரவை பகுதியில் நிறுத்த முடியாததால், மீதி படகுகளை கடலில் ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் மோர்பண்ணை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். காரணம் புயலால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தங்குவதற்கு பல்நோக்கு பேரிடம் கட்டிடம் இல்லையே என்ற கவலையில் உள்ளனர். தற்போது ஒரு சிலர் உப்பூரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

Tags : storms ,
× RELATED திருவாரூர் நகரில் தெருவிளக்குகள்...