×

திருமங்கலத்தில் மழை: 3 வீடுகள் இடிந்தன

திருமங்கலம், டிச. 4: திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருமங்கலம் அடுத்துள்ள எஸ்.பொட்டிபுரத்தை சேர்ந்த அழகுமுத்து என்பவரின் வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்துவிட்டது. வேறு யாருக்கும் சேதங்கள் இல்லை. இதேபோல் ஏ.வலையபட்டியை சேர்ந்த அங்கதேவரின் வீடு,. ஆலம்பட்டியை சேர்ந்த ராஜூ வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது. இங்கும் யாருக்கும் சேதாரங்கள் இல்லை இடிந்த வீடுகளின் சேத விவரங்களை வருவாய்த்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

Tags : houses ,Thirumangalam ,
× RELATED தொடர்மழையால் கறம்பக்குடி அருகே 2 வீடுகள் இடிந்து சேதம்