×

ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் முதல்வர் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்

 

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பினார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன்.

ஆனால், இந்த சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பீ டீம் என்றும், நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை. இதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்.

 

Tags : O. Panneerselvam ,Chennai ,Former Chief Minister ,Chief Minister ,M.K.Muthu. ,DMK ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...