×

772 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

ராசிபுரம், ஆக.26: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 772 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ராசிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி., ஆகியோர் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கலெக்டர் உமா, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர், குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம், மாவட்டத்தில் 772 அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் உள்ள 842 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 41,129 மாணவ, மாணவிகள் பயன் அடைகிறார்கள் என கலெக்டர் உமா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், திட்ட இயக்குநர் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், பிடிஓ.,க்கள் தனம், மேகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒன்றியம், தி.கைலாசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, ஒன்றிய துணை செயலாளர் தனபால், ஊராட்சி தலைவர் ராஜலட்சுமிமுருகன், முருகன், நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொளசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டம் ஊராட்சி தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் மொளசி ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் பிரியா சுரேஷ், துணைத்தலைவர் சந்திரசேகர், சரஸ்வதி சரவணன், கல்யாணி சந்திரன், பள்ளி ஆசிரியர் மணிகண்டன், தாமரைச்செல்வன், ரமேஷ், செல்வம், ராமலிங்கம், பசுபதி, குப்புசாமி, விஜயகுமார், சுப்பிரமணியம், பழனிவேல்ராஜன், சிவனேசன், ராசு காளியப்பன், தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பள்ளிபாளையம்: பல்லக்காபாளையம் அரசு பள்ளியில், காலை உணவு திட்டத்தை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நாச்சிமுத்து துவக்கி வைத்தார். நத்தமேடு, பச்சாம்பாளையம் ஆகிய பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, பேரூர் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், பேரூராட்சி தலைவர் ராதாமணி செல்வன், துணைத்தலைவர் பிருந்தாதேவி துவக்கி வைத்தனர். வெப்படை அரசு பள்ளியில், ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், கொக்கராயன்பேட்டை தொடக்கப்பள்ளியில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன், ஆலாம்பாளையம் பேரூராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பேரூராட்சி தலைவர் சகுந்தலா துவக்கி வைத்தனர்.

குமாரபாளையம் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை நகரமன்ற தலைவர் விஜயகண்ணன் துவக்கி வைத்தார். அதே போல், பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில், நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் துவக்கி வைத்தனர். நகராட்சி ஆணையாளர் தாமரை, நகர திமுக செயலாளர் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி வெங்கடாசலம் தலைமையில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். திமுக வர்த்தகரணி துணை அமைப்பாளர் குப்புசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 772 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து...