×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் கலெக்டர்கள். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநர் வினய், தொழில் நுட்பகல்வி இயக்குநராகவும், சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக இருந்த கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராகவும், திருப்பூர் கலெக்டர் வினித், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநராகவும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராகவும், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதவிவாளராகவும், தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பத்திரப்பதிவுத்துறை ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த விவேகானந்தன், கைத்தறி ஆணையராகவும், அர்ச்சனா பட்நாயக், ஆசிரியர் தேர்வாணைய தலைவராகவும், நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு செயலாளராகவம், எழுது பொருள் அச்சுத்துறை ஆணையராக இருந்த சுகந்தி, அருங்காட்சியக ஆணையராகவும், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராகவும், அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவன இணை செயல் அதிகாரியாகவும், நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரித்துறை கூடுதல் ஆணையராகவும் (நிர்வாகம்), கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராகவும், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, சர்வ சிக்‌ஷா அபியான் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கஜலட்சுமி, உள்துறை கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் கலெக்டர் ஷிரேயா சிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராகவும், தொழில் கல்வி இயக்குநர் லலிதா, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராகவும், ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராகவும், பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கணினி மய திட்டத்துறை சிறப்பு அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் நந்தகோபால், வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு செயலாளராகவும், நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பவ்யா தன்னேரு, ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராகவும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும்,
மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தரா லாசரஸ், மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் விசாகன், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராகவும், மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், எல்காட் நிர்வாக இயக்குநராகவும், காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரி சங்கர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராகவும், இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநராகவும், புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும், வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாத்துரை, தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராகவும், வீட்டு வசதித்துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராகவும், கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சை கலெக்டராகவும், சென்னை வணிக வரி இணை ஆணையர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராகவும், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, நாமக்கல் கலெக்டராகவும், சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறை கூடுதல் இயக்குநர் கலைச் செல்வி மோகன், காஞ்சிபுரம் கலெக்டராகவும், தமிழ்நாடு பைபர் நெட் கழக நிர்வாக இயக்குநர் கமல் கிஷோர் செங்கல்பட்டு கலெக்டராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் சங்கீதா, மதுரை கலெக்டராகவும், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் கலெக்டராகவும், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி கலெக்டராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், திருப்பூர் கலெக்டராகவும், சென்னை பெருநகர குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் சேகாசர்வ் நிர்வாக இயக்குநர் பூங்கொடி திண்டுக்கல் கலெக்டராகவும், ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், நாகை கலெக்டராகவும், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் சராயு கிருஷ்ணகிரி கலெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 ஆண்டுகள் ஒரே பணியில் இருந்த அதிகாரிகள் குறிப்பாக கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மே மாதம் என்பதால், குழந்தைகளின் கல்விக்காக தற்போது தமிழக அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளது.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kanchipuram Collectors ,Chennai ,Chengalbatu ,Kanchipuram ,IAS ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...