×

40 வருடங்களுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

கோவை, செப். 2: கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளியில் 1984ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் நேற்று மீண்டும் பள்ளிக்கு திரும்பி தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி, தாங்கள் பள்ளி நாட்களில் செய்த ரசிக்கும் படியான செயல்களை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு வந்த தருணம் மிகவும் சிறப்பான ஒன்று. நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக வாட்ஸ்அப் மூலமாக இணைந்து இருந்தோம். இப்போது மீண்டும் பள்ளிக்கு வந்து, ஒருவரை ஒருவர் சந்தித்து, எங்கள் வகுப்பறையில் அமர்ந்து பழைய நிகழ்வுகளை எண்ணிப்பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றனர்.

The post 40 வருடங்களுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mani Higher Secondary School ,Pappanayakanpalayam ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...