×

4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

தேன்கனிக்கோட்டை, மே 14: தளி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், அன்னியாளம், பாலதோட்டனப்பள்ளி, அகலக்கோட்டை, ஜவளகிரி ஆகிய கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ., தலைமை கழக பேச்சாளர் கலைஞர் பித்தன் ரவி ஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில், அஞ்செட்டி ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர்கள் சீனிவாசன், திருவேணி வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் கிரண், சிவசாமி, சீனிவாசன், கங்கப்பா, சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகர்(எ) பைரவமூர்த்தி, ரேணுகாகுமார், கெம்பண்ணா, மேகன், தேவராஜ், நரசிம்மா மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Thenkani Kottai ,Thali South Union DMK ,Anniyalam ,Balathottanapalli ,Akalakottai ,Javalagiri ,Thali South Union ,Divakar ,Krishnagiri ,West District ,Secretary… ,Street front ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்