×

கல்லணை கால்வாயில் குளித்த 2 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!

திருச்சி: திருவெறும்பூர் அருகே கல்லணை கால்வாயில் குளித்த 2 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சுரேஷ் என்பவர் தனது மகள்களான கிருத்திகா (13), யாஷிகாவுடன் (6) கல்லணை கால்வாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். கால்வாயில் குளித்தபோது சிறுமி யாஷிகா அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை மீட்க சுரேஷ் முயன்றுள்ளார். இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 6 வயது சிறுமி யாஷிகா சடலமாக மீட்பு. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை சுரேஷை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

 

The post கல்லணை கால்வாயில் குளித்த 2 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்! appeared first on Dinakaran.

Tags : Thiruverampur ,Suresh ,Kirutika ,Yashika ,
× RELATED வலை தளத்தில் அல்ல… களத்தில் வேலை...