பள்ளிபாளையம், மார்ச் 4: பள்ளிபாளையத்தில் 43 மையங்களில் நடைபெற்ற முகாம்களில் 2500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக 43 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு காலை முதல் மாலை வரை தொடர்ந்து குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வினியோகிக்கப்பட்டது.
ஆவாரங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் திவ்யாராம், மருத்துவர் சரண்யாதேவி ஆகியோர் பங்கேற்று முகாம் நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்தனர். மாலை வரை 2500 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
The post 2500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து appeared first on Dinakaran.