×

2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல 2031, 2036 தேர்தலிலும் திமுகதான் வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர்: தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலை வாய்ப்பும் அளிக்கிறது திருப்பத்தூர் மாவட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்புவாரி வழங்கி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமில்ல 2031, 2036 தேர்தலிலும் திமுகதான் வெல்லும். தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையில்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழித்த வளர்ச்சியை திமுக அரசு சீர்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு; ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. கோட்டையில் மட்டும் இருந்து நான் பணியை செய்யவில்லை, தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு செல்கிறேன் என்று கூறினார்.

The post 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல 2031, 2036 தேர்தலிலும் திமுகதான் வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dimukhan ,2026 Assembly elections 2031 ,2036 elections ,Chief Minister ,Mu. K. Stalin ,Tirupathur ,Tirupathur district ,MLA K. Stalin ,Tamil Nadu ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...