×

2 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்

 

நாமக்கல், மே 29: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த இரு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

பல இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப நிலை பகலில் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு நேர வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில், பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும்.

இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தை தடுக்க, தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையை சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயர்மனைகளின் பக்கவாட்டில் படுதா கட்டி தொங்க விட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post 2 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Meteorological Advisory Centre ,Namakkal Veterinary College Meteorological Advisory Centre ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி