×

150வது வார்டு திமுக வேட்பாளர் ஹேமலதா கணபதியை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம்

சென்னை: போரூர் காரம்பாக்கம் 150வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று  தீவிரமாக வாக்கு சேகரித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக சார்பில் போரூர் காரம்பாக்கம் 150வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ஹேமலதா கணபதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் திறந்த ஜீப்பில்  வீதிவீதியாக சென்று உதயசூரியன்  சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.அவருடன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி, மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், பகுதி துணை செயலாளர் ரமேஷ்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்று  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்….

The post 150வது வார்டு திமுக வேட்பாளர் ஹேமலதா கணபதியை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு...