×

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

 

கூடலூர், மே 24: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடலூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அக்க்ஷயா திலிப் 587 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு போலீஸ் மட்டம் பகுதியில் வசிக்கும் அக்சயா திலீப்பின் தந்தை திலீப் குமார் ஆட்டோ ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் தேவாலாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாணவி அக்சயா திலிப்பை குடும்பத்தினருடன் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கூடலூர் ஆர்டிஓ பொறுப்பு சங்கீதா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் காசிநாதன், ஐடியல் மெட்ரிக் பள்ளி தாளாளர் சுலைமான், மாணவியின் தந்தை திலீப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Akshaya Dilip ,Gudalur Ideal Matriculation Higher Secondary School ,Devarsolai Town Panchayat… ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...