×

100வது நாளை எட்டிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம்: ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் ஏற்பாடு

ஜெய்ப்பூர்: இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது. 150 நாட்களில் 12 மாநிலங்களை கடந்து 3,570 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். நடைப்பயணத்தின் 100-வது நாளான இன்று இதுவரை 737 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு 9 மாநிலங்களை ராகுல்காந்தி கடந்துள்ளார். தற்போது ராஜஸ்தானில் இருக்கும் ராகுல் 100-வது நாளை பாதயாத்திரை கடந்த நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார். நடைப்பயணத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பழங்குடியினர்கள் என பல தரப்பட்ட மக்களை ராகுல்காந்தி சந்தித்தார். இதை ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்….

The post 100வது நாளை எட்டிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம்: ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,India Unity Tour ,Congress ,Jaipur ,India Unity Walk ,Kanyakumari ,
× RELATED இந்திய ஒற்றுமை பயண தெருமுனை பிரசார கூட்டம்