×

₹50 லட்சம் கேட்டு வேலூருக்கு வந்த வியாபாரி காரில் கடத்தல் போலீஸ் வாகன சோதனையில் 4 பேர் கைது பிட் காயின் முதலீட்டில் மோசடி

வேலூர், நவ.30: பிட் காயின் முதலீட்டில் மோசடி செய்ததாக, வேலூர் வந்த வியாபாரியை ₹50 லட்சம் கேட்டு காரில் கடத்திய சென்னை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரை போலீசார் வாகன சோதனையின்போது கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரவேல்(42), சிக்கன் வியாபாரம் உட்பட பல தொழில்களை செய்து வருகிறாராம். இவர் கோல்டுகாயின், பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் திருப்பி தருவதாக கூறி, பலரிடம் லட்சணக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குமரவேல் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூருக்கு வியாபார விஷயமாக வந்தாராம். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது மனைவி ெஜயந்தி கடந்த 26ம் தேதி வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

வேலூரில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தினர். அதில் இருந்த 5 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்களில் ஒருவர் காணாமல் போனதாக தேடப்படும் குமரவேல் என்பது தெரிய வந்தது. மற்றவர்கள் கல்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவ்செல்ராய்(28), அவரது நண்பர்களான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த எட்வின்(34), சம்பத்(42) பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்(29) என்பதும் தெரியவந்தது. வியாபாரி குமரவேல், கல்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவ்செல்ராயிடம் பிட்காயின் உள்ளிட்ட தொழில் முதலீடுகளுக்காக ₹50 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. பணம் குறித்து கேட்டபோது, வேலூருக்கு வந்தால் தருவதாக குமரவேல் கூறினாராம். அதன்படி சஞ்சீவ்செல்ராய், நண்பர்களுடன் வேலூருக்கு வந்துள்ளார். அப்போது குமரவேல் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த 4 பேரும், அவரை காரில் கடத்தி சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றியுள்ளனர். அதேபோல், வேலூருக்கு வந்தபோது போலீசார் சோதனையில் சிக்கினர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், குமரவேலை மீட்டனர்.

The post ₹50 லட்சம் கேட்டு வேலூருக்கு வந்த வியாபாரி காரில் கடத்தல் போலீஸ் வாகன சோதனையில் 4 பேர் கைது பிட் காயின் முதலீட்டில் மோசடி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Chennai ,Kumaravel ,Namakkal district, ,Chikan ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...