×

வேன் மோதி பெயிண்டர் உயிரிழப்பு

 

உளுந்தூர்பேட்டை, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அ.குறும்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் நரேஷ்குமார் (28). பெயிண்டர் வேலை செய்யும் நரேஷ்குமார் நேற்று இருசக்கர வாகனத்தில் மங்கலம்பேட்டை பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பெட்ரோல் போட்டு விட்டு மீண்டும் உளுந்தூர்பேட்டை ரோட்டில் சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த நரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தாய் மல்லிகா கொடுத்த புகாரின் =பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

The post வேன் மோதி பெயிண்டர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,A.Kurumpur ,Kallakurichi district ,Ramalingam ,Naresh Kumar ,Mangalampet ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்