×

வேதாரண்யம் அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முற்றுகை

 

வேதாரண்யம்,ஜூலை 6: நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பெரிய வாய்க்கால் பிரிவு கொசவன் கண்ணி வாய்க்கால் முதல் இடம்புரி வாய்க்கால் வரை தூர்வார வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், லாப்டி விவசாயிகள், பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைஞாயிறில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தும் அதனை இது வரை செயல்படுத்தாத தலைஞாயிறு பொதுப்பணி துறையினரை கண்டித்து விவசாய சங்கத்தைச் சார்ந்த தனபால் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது பேசிய விவசாயிகள் உடனடியாக கொசவன் கண்ணி வாய்க்காலை ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரவில்லை என்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

The post வேதாரண்யம் அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers' Association ,PWD ,Vedaranyam ,Tamil Nadu Farmers Association ,Lottery Farmers ,Irrigation Farmers ,Thalaignayar ,Nagapattinam district ,Thalaignairu ,Kosavan Kanni ,Medampuri ,
× RELATED காப்பீடு நிவாரணம் வழங்குவதில்...