×

வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர், ஜூன் 10: உத்திரமேரூர் அடுத்த, மருத்துவான்பாடி கிராமத்தில், பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணியானது நடந்து வந்தது. புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Venugopal Swamy Temple Kumbabhishekam ,Uthiramerur ,Matawanpadi ,Rukmani Sathyabhama Sametha ,Venugopal Swamy Temple ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...