×

விவசாயிகளுக்கு இடுபொருள்கள்

 

கீழக்கரை, மே 3: ராமநாதபுரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உத்திரகோசமங்கையில் வேளாண்மை இடுபொருட்கள் கண்காட்சி நடந்தது. கோடை உழவு, உழவன் செயலி, தொழில் நுட்பங்கள் குறித்து பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. வேளாண்மை அடுக்கு திட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மானிய திட்டத்தில் விசை தெளிப்பான் கருவியை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.

வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி, உதவி இயக்குநர் அமர்லால், வேளாண்மை அலுவலர் சபிதா பேகம், துணை வேளாண்மை அலுவலர் சையத் முஸ்தபா, உதவி வேளாண்மை அலுவலர் பழனிமுருகன், மேலாளர் புலியுடையான் கலந்து கொண்டனர். உழவன் செயலி குறித்து தொழில்நுட்ப மேலாளர் சேகர் ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து பதிவேற்றம் செய்தார். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜிப்சம் நான்கு மூட்டைகள் ரூ.250 மானியத்தில் வழங்கப்பட்டது.

The post விவசாயிகளுக்கு இடுபொருள்கள் appeared first on Dinakaran.

Tags : for Farmers ,Lower ,Agricultural Info Exhibition ,Utrakoasamanga ,Ramanathapuram Department of Agriculture and Farmers Welfare ,Dinakaran ,
× RELATED டீ கடைக்காரர் மயங்கி விழுந்து சாவு