×

விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேஷன் பொருளை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை..!

சென்னை: தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு மிஷின் சர்வர் கோளாறு காரணமாக சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்க பதிவாளர். மாவட்ட வழங்கல் அலுவலர், மற்றும் உதவி ஆணையருக்கு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில்; * தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும்* தொழில்நுட்பக்கோளாறால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருளை தர வேண்டும் * ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் * முதியோர், மாற்றுத்திறனாளிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக பொருட்களை அளிக்க வேண்டும் * கடைக்கு வருவோரிடம் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கனிவுடன் விரல் ரேகையை சரிபார்க்கவும் அறிவிருத்தியுள்ளார்.  …

The post விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேஷன் பொருளை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Protection ,CHENNAI ,Commissioner ,Consumer Protection ,Consumer Protection Department ,Dinakaran ,
× RELATED ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு,...