×

விநியோகம் பணி தீவிரம் 5.79 லட்சம் சிறுவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

விருதுநகர், ஆக.24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் மற்றும் கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினர்.

கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையிலான 5,79,432 சிறுவர், சிறுமியர்கள், 20 முதல் 30 வயது வரையிலான 1,33,116 பெண்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் ரத்த சோகை, உடல்சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று சாப்பிட வேண்டுமெனவும், மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post விநியோகம் பணி தீவிரம் 5.79 லட்சம் சிறுவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,District Superintendent ,Anandakumar ,Collector ,Jayaseelan ,Department of Public Health and Immunization ,Virudhunagar Collector's Office ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!