×

விநாயகர் சதுர்த்தியையொட்டி தயார் நிலையில் சிலைகள்

 

பாலக்காடு, ஆக. 22: பாலக்காடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்கொண்டாட்டத்திற்கு பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலைகளை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
பாலக்காடு மாவட்டம் கொடும்பு கிராமப்பஞ்சாயத்தில் திருவாலத்தூர், கல்லிங்கல் மற்றும் கொடும்பு ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாக்கொண்டாட்டத்திற்கு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாக கலைஞர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து அருகிலுள்ள ஆறுகளில் சிலைகள் கரைக்கப்படுகின்றன. பாலக்காடு மாவட்டம் கொடும்பு பகுதிகளில் 4, 5 இடங்களில் சிற்பக்கலைஞர்கள்கள் விநாயகர் சிலை தயாரித்து வர்ணம் பூசும் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். சிங்கம் மீது அமர்ந்தவாறும், மூசிகவாகனத்தில் அமர்ந்தவாறும், அண்ணைப்பக்ஷி வாகனத்தில் அமர்ந்தநிலையில் பல்வேறு நிலைகளில் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி தயார் நிலையில் சிலைகள் appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi ,Palakkad ,Ganesha ,Vinayagar Chaturthi festival ,Palakkad district ,Tiruvalathur ,Kallingal ,Kodumbu ,Vinayagar Chaturthi ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...