×

வாகனம் மோதி மூதாட்டி பலி

 

மானாமதுரை, ஜூன் 13: மானாமதுரை அருகே கிருங்காகோட்டை விலக்கு அருகே வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தார். அவரது உடலை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மூதாட்டி அருகில் உள்ள கிருங்காகோட்டை, பாப்பாமடை, ராஜகம்பீரம் புதூர் கிராமங்களை சேர்ந்தவரா என்று விசாரித்து வருகின்றனர்.

The post வாகனம் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Krungakottai ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது