×

வர்த்தக சங்க கூட்டம்

சாயல்குடி, நவ.6: கடலாடியில் நகர் வர்த்தக சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றறது. கூட்டத்திற்கு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் வரவு,செலவு கணக்கு பார்க்கப்பட்டது. வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் வெள்ளையன் மற்றும் மறைந்த உள்ளூர் வியாபாரிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கடலாடி நீதிமன்றம், அரசு ஐடிஐ அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் நகர் வர்த்தக சங்க புதிய தலைவராக ராமகிருஷ்ணன், செயலாளராக முனியசாமி, பொருளாளராக மாரிதேவன் ஆகியோரும், துணைத் தலைவராக செல்வராஜ், கவுரவத் தலைவராக ராமலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக கார்த்திக்குமார், ராமர், ஆனந்த், சேதுபதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post வர்த்தக சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Kudladi ,Ramakrishnan ,Traders Association ,Vellayan ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கனமழை- 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்