×

வந்தவாசி அருகே வீடுகளில் பூட்டு உடைத்து நகைகள் திருடிய சம்பவத்தில் 2 பேரின் கைரேகை சிக்கியது: விரைவில் கைது என போலீஸ் தகவல்

 

வந்தவாசி: வந்தவாசி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் திருடிய சம்பவத்தில் 2 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் விரைவில் கைதாவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை(65), ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது மகன் விஜயன் குடும்பதினருடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் அனைவரும் உறங்கிய நிலையில் பின்பக்க கதவில் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 15 சவரன் தங்க நகையை திருடி சென்றனர்.

அதேபோல் சற்று தொலைவில் உள்ள சுரோஷ்குமார்(46) என்பவர் தனது இளைய மகள் திருமண விழாவிற்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் விஜயன், சுரேஷ்குமார் மனைவி மஞ்சுளா ஆகியோர் வந்தவாசி வடக்கு போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே திருட்டு சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை தடவியல் நிபுணர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அதில் 2 ஆசாமிகளின் கைரேகைகள் பதிவாகி உள்ளது. இந்த கைரேகைகள் மூலம் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைதாவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post வந்தவாசி அருகே வீடுகளில் பூட்டு உடைத்து நகைகள் திருடிய சம்பவத்தில் 2 பேரின் கைரேகை சிக்கியது: விரைவில் கைது என போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Dinakaran ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி