- வந்திதவளம்
- பாலக்காடு
- பாலக்காடு கலால் துறை
- நானேஷ்
- பெருமாட்டி மல்லஞ்சல்லை, சித்தூர் தாலுகா, பாலக்காடு மாவட்டம்
- சித்தூர்...
- தின மலர்
பாலக்காடு, மே 5: பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பெருமாட்டி மல்லன்ச்சள்ளையை சேர்ந்த நானேஷ் (32) என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாலக்காடு பாலக்காடு கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில் சித்தூர் ரேஞ்சு கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜனீஷ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது 15 கேன்களில் எரிசாராயம், பிக்கப் வேனில் கள்ளு ஆகியவற்றை இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மல்லன்ச்சள்ளையை சேர்ந்த நானேஷ் (32), கொல்லம் மாவட்டம் சாஸ்தாம்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (40) என்பவரையும் கலால்துறையின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அதிகளவு போதை கிடைப்பதற்காக கள்ளில் எரிசாராயம் கலந்து சப்ளை செய்வதற்காக வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டில் பதுக்கிய 446 லிட்டர் எரிசாராயம், 360 லிட்டர் கள்ளு, கடத்தலுக்காக பயன்படுத்திய பிக்கப் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
The post வண்டித்தாவளம் அருகே வீட்டில் பதுக்கிய 806 லிட்டர் எரிசாராயம், கள் பறிமுதல் appeared first on Dinakaran.
