×

வங்கிகளில் நகை கடன் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை திரும்ப பெற கோரிக்கை

 

பவானி, மே 27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி ஒன்றிய மாநாடு காடையம்பட்டியில் வழக்கறிஞர் சிவராமன், நிர்வாகிகள் பெருமாள், நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி செல்லமுத்து ஏற்றினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன் துவக்கி வைத்தார். செயல் அறிக்கையை ஒன்றிய செயலாளர் அருள் வாசித்தார். இதில், புதிய ஒன்றிய செயலாளராக கண்ணன், துணைச் செயலாளராக சிவராமன், சின்னசாமி, பொருளாளராக நஞ்சப்பன் கொண்ட 25 பேர்‌ குழு தேர்வு செய்யப்பட்டது.

மாவட்டச் செயலாளர் (பொ) மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர் மோகன்குமார் கோரிக்கையை விளக்கி பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வங்கியில் நகைக்கடன் பெறுவதற்கும், கடனை புதுப்பிக்கவும் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும். சின்ன புலியூர் ஊராட்சியில் அருந்ததியர் குடியிருப்பில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

The post வங்கிகளில் நகை கடன் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை திரும்ப பெற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Bhavani Union Conference of the Communist Party of India ,Kadayampatti ,Advocate ,Sivaraman ,Perumal ,Nagaraj ,Senior Administrator ,Chellamuthu ,District Administrative Committee ,Chandran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...