×

ரூ.2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

 

திருச்செங்கோடு, மே 10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் 40 மூட்டை கொப்பரையை கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.146.45 முதல் ரூ.172.25 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.100.10 முதல் ரூ.132.50 வரையிலுமாக மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

The post ரூ.2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Copra ,Thiruchengode ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி