×

ராம்விலாஸ் பஸ்வான் பிறந்த நாள் விழா

பள்ளிபாளையம், ஜூலை 8: பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில், லோக் ஜனசக்தி கட்சி சார்பில், முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் 78வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஆதவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். பஸ்வான் படத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அஸ்கர், துணைத்தலைவர் சீனிவாசன், சிறுபான்மையோர் அணி பொறுப்பாளர் பீர்முகமது, நகர இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

The post ராம்விலாஸ் பஸ்வான் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Ram Vilas ,Paswan ,Pallipalayam ,Former minister ,Ramvilas Paswan ,Lok Janashakti Party ,State Youth Vice President ,Aadhavan ,
× RELATED ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பஸ்வான் கட்சி தனித்து போட்டி