×

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, மே 3: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்ஆர்எம்யு) சார்ந்த ரயில்வே ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஊழியர்கள் மீது வேலைப்பளுவை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும்.

ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பை மாற்றம் செய்து தர வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க நிர்வாகிகள், ரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Southern Railway Mazdoor Union ,SRMU ,Senior Engineer's Office ,Erode Railway Station ,Arumugam… ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...