×

ரத்தினம் கல்வி நிறுவனங்கள் தாய்லாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஜூன் 4: ரத்தினம் கல்வி நிறுவனங்கள் தாய்லாந்தின் தொழில்நுட்ப நிறுவனம்(AIT) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ரத்தினம் வளாகத்தில் நடந்த இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில், AIT-இன் ஆய்வுத் துறை இயக்குனரும், கல்வித்திட்ட தலைவருமான டாக்டர் ப்ரணேஷ் மற்றும் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் முதன்மை வணிக அதிகாரியுமான டாக்டர் நாகராஜ் பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கிடையே கூட்டு ஆராய்ச்சி, கல்வி பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இதன் மூலம், பொறியியல் மற்றும் வணிகத் துறைகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் சிறப்பு பயிற்சி ஆகியவற்றின் பயனை பெறுவதால் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மேம்படுத்தப்படும். இந்த சர்வதேச ஒப்பந்தம், மாணவர்களும், பேராசிரியர்களும் உலக தரப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளை பெறவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

The post ரத்தினம் கல்வி நிறுவனங்கள் தாய்லாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Ratnam Educational Institutions ,Coimbatore ,Institute of Technology, Thailand ,AIT ,Ratnam ,Dr. ,Pranesh ,Academic Programs ,Ratnam Educational Institutions… ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...