மியூனிக்: ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன் லீக் தொடரில் பேயர்ன் மியூனிக் அணி கோல் மழை பொழித்து டைனமோ கீவ் அணியை வீழ்த்தியது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த இ பிரிவு 2வது லீக் ஆட்டத்தில் பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி), டைனமோ சீவ் (உக்ரைன்) அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பேயர்ன் அணி தொடர்ந்து கோல்கள் அடித்து அசத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸகி ஆட்டத்தின் 12 நிமிடத்தில் பெனால்டி மூலமாகவும், 27வது நிமிடத்தில் களத்தில் இருந்தும் அடுத்தது கோல் அடித்தார். அதனால் முதல் பாதி ஆட்டத்தில பேயர்ன் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் அணியின் செர்சே ஞாப்ரி 68வது நிமிடத்திலும், லெரோய் சேனே 74நிமிடத்திலும், எரிக் மேக்சிம் மோடிங் 87வது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார். ஆனால் டைனமோ அணி கடைசிவரை போராடியும் கோலடிக்க முடியவில்லை. அதனால் ஆட்ட நேர முடிவில் பேயர்ன் 5-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் ஆட்டத்தில் பார்சிலோனா(ஸ்பெயின்) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதனால் புள்ளிப் பட்டியலில் பேயர்ன் அணி முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நேற்று இ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் உள்ள பார்சிலோனா அணி 0-3 என்ற கோல் கணக்கில் பெனிஃபிசியா(போர்ச்சுகல்) அணியிடம் தோற்றது. தொடர் தோல்வி காரணமாக பார்சிலோனா புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது….
The post யுஇஎப்ஏ சாம்பியன் லீக்; பேயர்ன் கோல் மழை: தொடர் தோல்வியில் பார்சிலோனா appeared first on Dinakaran.