×

மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் எம்பி.யுமான அர்ஜூன் சிங் நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சிங், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜ.வில் இணைந்தார். அங்கு அவருக்கு பராக்பூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக அவர் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் நேற்று அவர் அக்கட்சியில் மீண்டும் சேர்ந்தார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `மேற்கு வங்க பாஜ துணைத் தலைவரும், பராக்பூர் தொகுதி எம்பி.யுமான அர்ஜூன் சிங்கை திரிணாமுல் காங்கிரஸ் குடும்பம் வரவேற்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது….

The post மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,West Bengal ,Kolkata ,-president ,Trinamool Congress ,Dinakaran ,
× RELATED பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி